2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

தங்கச்சங்கிலியை அறுத்தவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 02 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                        

திருகோணமலை, வெருகல் பூமரத்தடிச்சேனை பிரதேசத்திலுள்ள கோவிலொன்றுக்கு  கடந்த மாதம் மூன்றாம் திகதி சென்றுகொண்டிருந்த  பெண் ஒருவரினுடைய  சுமார் 70,000 ரூபாய் பெறுமதியான தங்கச்சங்கிலியை அறுத்துச்சென்ற குற்றச்சாட்டின் பேரில்  தேடப்பட்டுவந்த நபரை நேற்று புதன்கிழமை  இரவு கைதுசெய்ததாக பொலிஸார்  தெரிவித்தனர்.

தலைமறைவாக இருந்த இந்த சந்தேக நபர், அதிக திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .