Suganthini Ratnam / 2015 ஜூலை 03 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
ஹபரண -கந்தளாய் வீதியில் பயணித்த வானும் மோட்டார் சைக்கிளும் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சம்பத்குமார் (வயது 28) என்பவர் மரணமடைந்துள்ளதாக ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து குருநாகலுக்கு சென்ற வானும் ஹபரணையிலிருந்து கந்தளாய்க்கு சென்ற மோட்டார் சைக்கிளுமே இந்த விபத்தை எதிர்நோக்கியது.
மோட்டார் சைக்கிளில் சென்றவர் லொறியொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோது, முன்னால் வேகமாக வந்த வானுடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.
இதேவேளை, வான்; சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago