Suganthini Ratnam / 2015 ஜூலை 02 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்,ஏ.எம்.ஏ.பரீத்
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையிலான உயர் அதிகாரிகளுக்கும் புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு மாகாண பிரதம செயலாளர் காரியாலய கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த சந்திப்பில் அமெரிக்கா, நெதர்லாந்து, இந்தியா, சவூதி அரேபியா, ஓமான், குவைத், பஹ்ரைன் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளின் இலங்கை தூதுவர்கள் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம், கைத்தொழில், விவசாயம், கல்வி, மீன்பிடி, உல்லாசப் பயணத்துறை, வீதி அபிவிருத்தி, முதலீடுகள், தொழில் வாய்ப்புக்கள் உள்ளிட்டவை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளினூடாக கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும் வேலைவாய்ப்புக்கும் மற்றும் இதர தொழில்நுட்ப அபிவிருத்திக்கும் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தூதுவர்களும் உறுதியளித்தனர்.
கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் மாகாணசபை பிரதம செயலாளர், முதலமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago