Suganthini Ratnam / 2015 ஜூலை 08 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, மூதூரில் செவ்வாய்க்கிழமை (07) இரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூதூர் மத்திய குழுக் கூட்டம், கடும் முறுகல் நிலையுடன் முடிவடைந்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மூதூரிலிருந்து வேட்பாளர் ஒருவரை களம் இறக்குவதற்கான கூட்டம், மூதூர் கோப்வெஸ் மண்டபத்தில் முன்னாள் மூதூர் பிரதேச தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்றது.
பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மூதூரிலிருந்து மொத்தம் ஏழு பேர்; விருப்பம் தெரிவித்த நிலையில், இவர்களில் தகுதியான ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு சிலர் ஒத்துழைக்காமல் இதன்போது கேள்விகளை கேட்டனர். இதைத் தொடர்ந்து சபை அமைதி இழந்து குழப்பம் அடைந்தது.
பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை களம் இறக்குவதற்கு ஒரு குழுவினரும் புல்மோட்டையை சேர்ந்தவரும் தற்போது மூதூரில் வசிப்பவருமான சமூக ஆர்வலர் ஏ.அமீனை களம் இறக்குவதற்கு மற்றுமொரு குழுவினரும் தீவிரமாக செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago