2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

வீதி சீர்யின்மையால் மக்கள் அவஸ்த்தை

Sudharshini   / 2015 ஜூலை 15 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை மொறவௌ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாமல்வத்த கிராமத்துக்கு செல்லும் வீதி பல வருட காலமாக குன்றும் குழியுமாக காணப்படுவதாக நாமல்வத்த மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேற்றப்பட்ட இக்கிராமத்துக்கு வீட்டுத் திட்டங்களை அமைத்துக்கொடுத்துள்ள போதும், அன்றாட போக்குவரத்துக்காக மக்கள் பயன்படுத்தும் வீதியானது சீர் இன்றி காணப்படுவதாகவும் இதனால், அவ்வீதியால் அவசர நேரங்களில் நோயாளர்களை கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாமல்வத்த வீதியின் அவலநிலை குறித்து மொறவௌ பிரதேச செயலாளர் டப்ளியூ.எம்.பீ.விசயந்தவிடம் கேட்டபோது, தற்பொழுது அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்  ஊடாக தகவல்களை திரட்டி வருவதாகவும் அதன் விவரங்களை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அனுப்பி அதற்குரிய அனுமதி கிடைத்தவுடன் வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .