2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 ஜூலை 21 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

மூதூர் பிரதேச செயலகத்தினூடாக சம்பூர் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு மூதூர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.நாகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.  

அத்துடன், முதலீட்டு ஊக்குவிப்புச் சபையினால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட அலுவலகமான  மூன்று  கென்டேனர்களை அகற்றுமாறும் அவர் கோரினார்.

சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் நோக்கில் மீள்குடியேற்ற அதிகாரசபையின் தலைவர் ஹரீன் பீரிஸ் திருகோணமலைக்கு  நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்து, கிழக்கு மாகாண கல்வி  அமைச்சு கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர்களான  ஜனார்தனன், கு.நாகேஸ்வரன் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, சம்பூர் காணி விடுவிப்பு தொடர்பாக சட்ட மா அதிபர் அலுவலகத்திலிருந்து உத்தியோகபூர்வமான கடிதத்தை உடனடியாகப் பெற்று, மூதூர் பிரதேச செயலகத்தின்; மூலமாக காணி உரிமையாளர்களை பதிவுசெய்து உத்தியோகபூர்வமாக மீள்குடியேற்றுதல், மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்கான நிதி வளம் மற்றும்  ஏனைய அமைச்சுக்கள், திணைக்களங்களின் ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .