Yuganthini / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், வடமலை ராஜ்குமார், ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா, குட்டிக்கரச்சி பகுதியில் இடம்பெற்ற திடீர் சுற்றி வளைப்பில் அனுமதிப்பத்திரமின்றி மரக் குற்றிகளை வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர், திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால், இன்றுக் (3) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து, 10' - 15' நீளமுடைய 9 மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தங்களுக்குக் கிடைத்த தகவல் ஒன்றில் அடிப்படையிலேயே, இச்சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சந்தேகநபரை, கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
14 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 Mar 2026