Kogilavani / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதி, ஹம்பாந்தோட்டை- கடுவெவ பிரதேசத்தில் யானை ஒன்று வீதியை குறுக்கிட்டதால் மோட்டார் சைக்களிலில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், கதிர்காமத்துக்கு செல்லும் நோக்கில் நேற்று மாலை மோட்டார்சைக்கிளில் மேற்படி வீதியில் பயணித்துள்ளனர்.
இதன்போது, வீதியை யானை குறுக்கிட்டதால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணும் அவரது குழந்தையும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கடந்த 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை-கெலியபுர பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று குறுக்கிட்டதால் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
காட்டு யானைகள் பாதையை கடந்து செல்வதால் இவ்வீதியில் பயணிப்போர் மிகுந்த அச்சத்துடன் பயணிப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.
36 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago