2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

யானையின் அட்டகாசத்தால் போக்குவரத்து தடை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாந்தோட்டை – மத்தல வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (01)  யானையொன்று வீதியின் குறுக்காக நின்றுகொண்டிருந்தமையினால் சுமார் 45  நிமிடங்கள் ஒருவழி போக்குவரத்து மட்டுமே இடம்பெற்றது என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.  

காலை 7 மணியில் இருந்து 8.45 மணிவரையான 45  நிமிடங்கள் குறித்த யானை,  வீதியின் குறுக்காக நின்றிருந்தமையினால் போக்குவரத்தை சீர்படுத்த முடியாமல் பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அத்துடன், யானையை சமாளித்து கொண்டு ஒருவழி வழிப்பயணமாக சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீதும் யானை தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். 

போக்குவரத்து வசதியை விஸ்தரித்துள்ள போதும் அம்பாந்தோட்டை – மத்தல வீதியில் காட்டு யானைகளின் தொல்லை ஓயவில்லை என மக்கள் விசனம் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .