2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

இளைஞர் மாநாட்டை முன்னிட்டு 6 பாடசாலைகளுக்கு விடுமுறை

Super User   / 2013 நவம்பர் 05 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். இஸட். எம். இர்பான்

பொதுநலவாய இளைஞர் மாநாட்டை முன்னிட்டு ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலுள்ள ஆறு பாடசாலைகளுக்கு தென் மாகாண கல்வி திணைக்களத்தினால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை முதல் 15ஆம் திகதி வெளிக்கிழமை வரை விடுமுறை வழங்கப்பட்டு;ள்ளது.

ஸாஹிரா தேசிய பாடசாலை, புனித மேரி தேசிய பாடசாலை, சுசி தேசிய பாடசாலை, ஹம்பாந்தோட்டை வித்தியாலயம், இக்ரா ஆரம்ப வித்தியாலயம், மற்றும் ரொடரி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்ப வித்தியாலயம் ஆகியவற்றுக்கே விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நவம்பர் மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை பொதுநலவாய இளைஞர் மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .