2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க.வைச்சேர்ந்த 51 பேருக்கு பிணை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான பேரணியின் மீது தாக்குதல் நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந் 51 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 51 பேரும் மாத்தறை பிரதான நீதவான் ருவான் சிசிர குமார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர்களுக்கு நீதவானால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர்களில் தென் மாகாண சபையின் உறுப்பினர் கயான் சஞ்ஜீவ,சந்தன பிரியந்த, மாத்தறை மாநகர சபையின் எதிர்க்கட்சித்தலைவர் உபுல் நிசாந்த ஆகியோரும் அடங்குகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .