2021 மே 08, சனிக்கிழமை

11 வருடங்களின் பின்னர் டீஐஜீக்கு எதிராக புகார்

Editorial   / 2017 ஜூலை 19 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

11 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் பெண்ணொருவர் மீதான வன்புணர்வுச் சம்பவம் தொடர்பில், ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக, முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்ட சம்பவமொன்று, காலியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக,  பொலிஸார் தெரிவித்தனர்.

காலி, கோனபினுவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவரே, இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். கடந்த 11 வருடங்களுக்கு முன்னர், காலி மாவட்ட பொலிஸ் அதிகாரியொருவர், தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்று கூறியே, அப்பெண் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

தனது பெற்றோர், குறித்த பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பூஜையொன்றை மேற்கொண்டிருந்த சமயம், அந்த இல்லத்தின் மேல் மாடியில் வைத்தே, தான் வன்புணர்வுக்கு இலக்கானதாகவும், அப்பெண் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பிலான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதிருக்க, இழப்பீட்டுத் தொகையொன்றையும் வீடொன்றையும் பெற்றுத்தருவதாக, குறித்த பொலிஸ் அதிகாரி உடன்பட்டிருந்ததாகவும், அப்பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கலப்பத்தி, “சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும்” என்றார்.

எவ்வாறெனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர், தன் மீதான குற்றச்சாட்டை, கடுமையாக நிராகரிப்பதாகக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X