2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிந்தோட்டையில் இரத்த தான முகாம்

Super User   / 2013 நவம்பர் 04 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிந்தோட்டை முஸ்லிம் வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான முகாம் கடந்த சனிக்கிழமை கிந்தோட்டை ஸாஹிரா தேசிய கல்லூரியில் நடைபெற்றது.

கராபிட்டிய வைத்தியசாலையின்  இரத்த தான பிரிவுடன் கிந்தோட்டை முஸ்லிம் வாலிபர் சங்கம் இணைத்து ஏற்பாடு செய்திருந்த இந்த இரத்த தான முகாமில் சுமா 250 பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பிரதேச வாழ் மக்கள் இன மத பேதமின்றி பெரும் ஆர்வம் காட்டியதுடன் பெண்கள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த இரத்த தான முகாமிற்கு விஷேட அதிதியாக தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் கலந்து சிறப்பித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X