2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

ஹம்பாந்தோட்டை மாநகர சபை உறுப்பினர்கள் மலேசியா விஜயம்

Super User   / 2014 ஜனவரி 15 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.எம். இர்பான்

ஹம்பாந்தோட்டை மாநகர சபை உறுப்பினர்கள் இன்று அதிகாலை மலேசியா சென்றுள்ளனர்.எதிர்வரும் 21ஆம் திகதி வரை மலேசியாவில் தங்கவுள்ள மாநகர சபை உறுப்பினர்கள் அந்த நாட்டின் நகரங்களையும் அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிடவுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய ருஹுணு மாகம்புர சர்வதேச மாநாட்டு பேரவைக்கு முன்னால் நிர்மாணிக்கப்படவுள்ள இரவு சந்தைக்கு மலேசிய நாட்டு மாதிரியையும் அநுபவத்தினையும் பெற்று இத்திட்டத்தினை ஹம்பாந்தோட்டையில் வெற்றிகரமாக முன்னெடுக்கும் முகமாகவே இவர்கள் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .