2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

திவிநெகுமவின் நான்காவது வலயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 23 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்களத்தின் நான்காவது வலயத்தின் தலைமைக்காரியாலயம் ஹம்பாந்தோட்டையிலுள்ள வுல் ஜென்ஸ் புதிய வீதியிலுள்ள பழைய தொழில் காரியாலயத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்வுள்ளது.

இந்நிகழ்வானது பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளது.
 
திவிநெகும வேலைதிட்டங்களை விஸ்தரிக்கும் முகமாக  தேசிய ரீதியில் ஆறு வலயங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. பத்தரமுல்லை வலயம், கம்பஹா வலயம், கண்டி வலயம், ஹம்பாந்தோட்டை வலயம், வவுனியா வலயம், அனுராதபுர வலயம் ஆகியனவே இவ் ஆறு வலயங்களாகும்.

இத்திணைக்களத்தின் பணிகள் அனைத்தும் இந்த ஆறு வலயக் காரியாலயங்கள் மூலமாக செயற்படுத்தப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க, ஹம்பாந்தோட்டை வலயதுக்கு பொறுப்பான மேலதிக பணிப்பாளர் நாயகம் ஏ.பி.எஸ்.ரஞ்சித் குணசேகர உட்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உதவி ஆணையாளர் யூ.பி.எஸ்.அனுறுத்த பியதாச தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .