2021 ஜூன் 17, வியாழக்கிழமை

கோட்டாபய: ஜென சரத் பொன்சேகா உடனடியாக இராணுவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார்

Super User   / 2010 பெப்ரவரி 11 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ராஜபக்சவின் தம்பி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் இராணுவ தளபதி ஜென. சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டது இலங்கையில் இரனுவ ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்கு என்றும் இதற்கு நோர்வேயும் அமெரிக்காவும் உடன்தையாயிருந்தன என்றும் சிங்கப்பூர் பத்திரிக்கையான ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் குற்றம் சாடியுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் தளபதி ஜென. போன்செகவை கடுமையாக விமர்சித்த கோட்டாபய இராணுவத்தில் பல திறமைசாலிகள் உள்ளனர் என்றும், புலிகளுக்கெதிரான யுத்தத்தை வேறு எந்த தளபதியை கொண்டும் வென்றிருக்கலாம் என்றும் அந்த செவ்வியில் கூறியிருக்கிறார்.
ஜனாதிபதிக்கு எதிராக சதி முயற்ச்சியில் ஈடுபட்டதாகவும் இராணுவத்தினுள் பிரிவுகளை உண்டாகினாருன்றும் கஊற்றம் சாட்டப்பட்டு கடந்த திங்கட் கிழமை பொன்சேகா இராணுவ பொலிசாரினால் கைது செய்யப்பட்டதும், அதனை தொடர்ந்து பொன்சேகாவின் ஆதரவாளர்களினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட எதிர்பூர்வலங்க்களும் யாவரும் அறிந்ததே.
பொன்சேகாவின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர். (IANS)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .