2021 ஜூன் 14, திங்கட்கிழமை

மெஸ்ஸியின் தண்டனை உறுதி செய்யப்பட்டது

Editorial   / 2017 மே 25 , மு.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரி மோசடியில், ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகத்தின் ஆர்ஜென்டீன நட்சத்திர முன்கள வீரரான லியனல் மெஸ்ஸிக்கு விதிக்கப்பட்ட 21 மாத சிறைத்தண்டனையையும் 2.09 மில்லியன் யூரோ அபராதத்தையும், ஸ்பானிய உச்ச நீதிமன்றம், நேற்று (24) உறுதிப்படுத்தியுள்ளது.   

பெலிஸே, ஐக்கிய இராச்சியம், சுவிற்ஸர்லாந்து, உருகுவே ஆகிய நாடுகளிலுள்ள நிறுவனங்களைப் பயன்படுத்தி, 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை, தனது உரிமங்களின் மூலம் மெஸ்ஸி உழைத்த வருமானமான 4.16 மில்லியன் யூரோக்கள் மீதான வரியைச் செலுத்தத் தவறியமையில், மெஸ்ஸியும் அவரது தந்தை ஜோர்ஜ் ஹொராசியோ மெஸ்ஸியும், கடந்தாண்டு ஜூலையில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்டிருந்தனர்.   

மெஸ்ஸிக்கும் அவரது தந்தைக்கும் 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், வன்முறையற்ற குற்றங்களுக்கான, 2 ஆண்டுகளுக்குட்பட்ட சிறைத்தண்டனைகள் ஸ்பெய்னில் ஒத்திவைக்கப்படுகின்றமை வழமையாகும்.   

இந்நிலையிலேயே, மெஸ்ஸியும் அவரது தந்தையும், உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்த நிலையில், மெஸ்ஸிக்கான சிறைத்தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம், மோசடி செய்த பணத்தை, வரி அதிகாரிகளிடம் செலுத்தியமையைத் தொடர்ந்து, அவரது தந்தைக்கான சிறைத்தண்டனையை 15 மாதமாகக் குறைத்துள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .