2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

றியல் மட்ரிட் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 14 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகா தொடரின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற போட்டியொன்றில் றியல் மட்ரிட் அணி வெற்றி பெற்றுள்ளது.

றியல் மட்ரிட், லாஸ் பல்மாஸ் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் றியல் மட்ரிட் அணி வெற்றி பெற்றது. றியல் மட்ரிட் சார்பாக பெறப்பட்ட கோல்களை, போட்டியின் 24ஆவது நிமிடத்தில் அணித்தலைவர் சேர்ஜியோ ராமோஸும் போட்டியின் 89ஆவது நிமிடத்தில் கஸேமிரோவும் கோல்களைப் பெற்றிருந்தனர்.

இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் 63 புள்ளிகளைப் பெற்றுள்ள றியல் மட்ரிட், லா லிகா தொடரின் புள்ளிகள் தரவரிசையில் மூன்றாமிடத்தை வகிக்கின்றது. 67 புள்ளிகளுடன் அத்லெட்டிகோ மட்ரிட் இரண்டாமிடத்திலும் 75 புள்ளிகளுடன் பார்சிலோனா முதலிடத்திலும் உள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .