2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

இந்தியாவில் நடந்த போட்டியை இலங்கை வீரர்கள் ஆட்டநிர்ணயம் செய்தனர் : சூதாட்ட முகவர்

Super User   / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டியொன்றின் பெறுபேறு இலங்கை அணி வீரர்களால் நிர்ணயம் செய்யப்பட்டது என இந்திய சூதாட்ட முகவர் ஒருவர் கூறியுள்ளார்.

05.12.2009 ஆம் திகதி ராஜ்கொட் நகரில் நடைபெற்ற மேற்படி போட்டி தூய்மையானது அல்ல என ரமேஸ் பாய் (42) எனும் இம்முகவர் தெரிவித்துள்ளதாக 'டைம்ஸ் ஒவ் இந்தியா' பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கை வீரர்களே அப்போட்டியை ஆட்டநிர்ணயம் செய்தார்கள் எனவும் அப்போட்டியே சந்தேகத்திற்குரியதென தான் இறுதியாக கேள்விப்பட்ட போட்டி எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய வீரர்கள் தூய்மையானவர்கள் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'அவர்கள், குறிப்பாக சிரேஷ்ட வீரர்கள் மிகக் குற்றமற்ற வீரர்களின் வரிசையில் உள்ளனர்' என ரமேஸ் பாய் கூறியுள்ளார். தான் 10,000 கோடி ரூபா பெறுமதியானவர் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜ்கொட் நகரில் நடைபெற்ற மேற்படி போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 414 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் சார்பில்  திலகரட்ன தில்ஷான் 160 ஓட்டங்களைக் குவித்தார். எனினும் 3 ஓட்டங்களால் இலங்கை அணி அப்போட்டியில் தோல்வியுற்றது.

அதில் இலங்கை அணி 27 மேலதிக ஓட்டங்களையும் இந்தியா 21 மேலதிக ஓட்டங்களையும் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .