Editorial / 2020 ஒக்டோபர் 03 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலே கைது செய்யப்பட்டவர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக அதிருப்தியை வெளியிட்ட அவர், அதனால் மேற்படி தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களும் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றார்.
குறிப்பாக, மேற்படி சந்தேக நபருக்கு ஈஸ்டர் தாக்குதலில் பங்கெடுத்திருந்த குண்டுதாரி ஒருவருடன் நேரடி தொடர்பு இருந்துள்ளதெனவும், அது தொடர்பாக உறுதி செய்யப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் செய்திகளில் கூறியிருந்தமைக்கான ஆதாரங்களும் தம்மிடம் உள்ளது என்றார்.
எவ்வாறாயினும், இவ்வாறான குற்றவாளிகளை விடுவிப்பதால் ஆளும் தரப்புக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில் ரகசிய 'டீல்' இருக்கிறனாவென சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த விசாரணைகள் நியாயமாக இடம்பெறுமா என்ற அச்ச உணர்வு தோன்றுகிறது என்றும் தெரிவித்தார்.
அதனால், இந்த விடயம் தொடர்பாக கிறிஸ்த்தவ எம்.பிக்கள் மாத்திரமின்றி, சகல எம்.பிக்களும் இந்த விடயம் தொடர்பாக ஆராய வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், முன்னாள் அமைச்சரான ரிஷாட் பதியூதினின் சகோதரரான ரிப்கான் பதியூதீன் திடீரென விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பையும் வெளியிட்டார்.
50 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
2 hours ago