2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இணக்கப்பாடின்றி முடிந்தது சந்திப்பு

Freelancer   / 2022 ஏப்ரல் 10 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தில் இருந்து கடந்த வாரம் விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சந்தித்திருந்த நிலையில், சந்திப்பு இறுதி இணக்கப்பாட்டின்றி முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த சந்திப்பில் இடைக்கால அரசாங்கம் குறித்து முக்கியமான எதுவும் பேசப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.
 
கட்சிகளுக்கிடையிலான உறவுகளை பேணுவதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக  அவர் கூறினார்.

எவ்வாறாயினும், மேலதிக கலந்துரையாடலுக்காக மீண்டும் சந்திப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .