Editorial / 2026 ஏப்ரல் 29 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில், மேலும் 600,000 அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்துப் பாரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (28) அன்று நடைபெற்றது அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமக்குரிய கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறவில்லை என அமெரிக்க அஞ்சல் சேவை விடுத்த முறைப்பாட்டினைத் தொடர்ந்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் நிலவி வரும் நிலையில், தற்போது மேலதிகமாக இந்தத் தொகையும் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
திறைசேரிக்குச் சொந்தமான இந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டமை தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தற்போது நீதிமன்றத்தில் முதற்கட்ட ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் ஐந்து அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிதி மோசடியின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் மற்றும் இதன் வலையமைப்பு குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
17 minute ago
29 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
38 minute ago
1 hours ago