2025 ஜூலை 19, சனிக்கிழமை

இராஜினாமா கடிதத்தை அனுப்பினார் ரணில்; மாலை விசேட உரை

Editorial   / 2019 நவம்பர் 20 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் கடிதமானது, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை, காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

15 உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள காபந்து அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மூவரும் உள்ளடங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X