Editorial / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் ஆரம்ப வைத்தியசாலையில் உயிரிழந்த நபர், கொரோனா தொற்றாளரென உறுதியாகியுள்ளதென, தொற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெ ளியிட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 60 வயதுடைய ஆண் என்றும், கப்பல் மாலுமி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரேனிலிருந்து இந்த மாதம் 2ஆம் திகதி இலங்கைக்கு வருகைத் தந்த இவர், தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். எனினும் இதன்போது இவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்றும் மாரடைப்பு காரணமாக, 9ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், இன்று (14) உயிரிழந்துள்ளதுடன், இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025