2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிரடி அறிவிப்பு

Freelancer   / 2022 ஏப்ரல் 15 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நண்பகல் ஒரு மணி முதல் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை வரையறுக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மோட்டார் சைக்கிளுக்கு 1,000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1,500 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

அத்துடன், கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கு அதிகபட்சமாக 5000 ரூபாவிற்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

எனினும், பஸ், லொறி மற்றும் வணிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் வரையறை கிடையாது என பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .