Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவிய பங்காளிக் கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இல்லை என்பதை அநுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற பேரணி உறுதிப்படுத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
நேற்று (15) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொது ஆணையை சோதிக்கும் வகையில் தேர்தலுக்கு தயாராகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த பேரணியின் போது எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்ததாக கயந்த எம்.பி குறிப்பிட்டார்.
பிரதமரின் சவாலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசஸ மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும் எந்தவொரு தேர்தலையும் தாமதமின்றி நடத்துமாறும், பொதுமக்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
அரசியல் அழுத்தத்தை உணர ஆரம்பித்துள்ள தற்போதைய நிர்வாகம், வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் வகையில் ‘100,000 திட்டங்கள்’ கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அரசியல் பேரணிகளை ஒழுங்கமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கருணாதிலக தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அறிமுகப்படுத்திய போது எரிபொருள் விலை சூத்திரம் மிகவும் கேலிக்குரியதாக இருந்தது எனவும் மங்கள சமரவீரவுக்கு சபையில் அனுதாபம் தெரிவிக்கும் போது இந்த சூத்திரத்தை கேலி செய்தவர்கள் இப்போது அதைப் பாராட்டுகிறார்கள் என்றார்.
மீண்டும் எரிபொருள் விலை அதிகரித்தால் நாட்டின் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கு மேலும் சுமை ஏற்படும் என்றும் கயந்த எம்.பி சுட்டிக்காட்டினார்.
3 minute ago
19 minute ago
25 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
19 minute ago
25 minute ago
41 minute ago