Janu / 2026 மார்ச் 21 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) எரிபொருள் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
இதற்கமைய, டீசல் ஒரு லீற்றரின் விலை 79 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 382 ரூபாவாகவும்,
சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 443 ரூபாவாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 81 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 398 ரூபாவாகவும்,
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 455 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
இதேவேளை, மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 255 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலினால் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை மாற்றத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 minute ago
25 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
37 minute ago