2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

”கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்டு கொடுங்கள்“: மோடியிடம் விஜய் வலியுறுத்தல்

Editorial   / 2025 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவெக 2-வது மாநில மாநாடு மதுரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநாட்டில் தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-

சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும். வேடிக்கை பார்க்க சிங்கம் வெளியே வராது. காட்டில் பல விலங்குகள் இருக்கலாம். சிங்கம் கர்ஜித்தால் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிரும்.

மதுரை மண்ணில் வாழும் மக்கள் உணர்வுப்பூர்வமான  சினிமாவிலும், அரசியலிலும் நமக்கு பிடித்தவர் எம்ஜிஆர். அவருடன் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரைப் போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் விஜயகாந்துடன் பழகுவதற்கு எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர்தான்.

யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும். ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா? இவ்வாறு அவர் கூறினார்.


எல்லாருக்கும் எல்லாமும் என்ற அரசியலை 1967-ல் அண்ணா கொண்டு வந்தார். அண்ணா கொண்டு வந்த சமத்துவ அரசியலே திராவிடம். அண்ணாவின் குறிக்கோளில் இருந்து மு.க.ஸ்டாலின் முற்றிலும் விலகிவிட்டார்.

எம்ஜிஆர் உருவாக்கிய கொள்கை, அதை வழிநடத்திய ஜெயலலிதாவின் கொள்கையில் இருந்து தடம் மாறி பாஜகவுடன் உறவு வைத்துக் கொண்டு, தமிழகத்தில் பாஜக பின்புற வாசல் வழியாக அதிகாரத்தை அடைவதற்கு அதிமுகவின் இன்றைய தலைமை எல்லா முயற்சியும் செய்து கொண்டிருக்கிறது.

அண்ணாவின் கொள்கைகளையும், எம்ஜிஆரின் கொள்கைகளையும் உள்வாங்கி அதை அரசியல் வெற்றியாக மாற்றி 2026-ல் மிகப்பெரிய இளைஞர் புரட்சியை உருவாக்கி, விஜய் முதல்வராகி அந்த கொள்கைகளை நிறைவேற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒரேயொரு கோரிக்கை விடுத்துள்ள விஜய், எமது மீனவர்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகின்றனர். ஆகையால், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டு தாருங்கள் அது போதும் மோடி என்றார் விஜய்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X