Editorial / 2020 பெப்ரவரி 01 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வின் ஆட்சி நீண்ட நாள்களுக்கு நிலைக்காதென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவார் எனத் தெரிவிக்கும் ஹேஷான் ஹேவாவிதான எம்.பி, எதிர்கட்சி பலவீனமானால் மாத்திரமே அந்த ஆட்சி நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.
அதனால் அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துத்தை தொடர்ச்சியாக தன்வசம் வைத்திருக்க முடியாதென தெரிவித்த அவர், அவ்வாறு தலைமைத்துவத்தில் நீடிப்படு கட்சியின் நெறிமுறைகளுக்கு புறம்பானதெனவும் தெரிவித்தார்.
அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐ.தே.கவின் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று நடைபெற்றதால், அதற்கு பதிலடியாக ஐ.தே.கவின் சிரேஷ்ட எம்.பிக்கள் குழுவொன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்ட முயன்றதாவும், அந்த கூட்டத்துக்கு 6 பேர் மாத்திரமே வந்திருந்தமை வேடிக்கையானதெனவும் தெரிவித்தார்.
அதனால், எதிர்க்கட்சிக்குள் இவ்வாறான நெருக்கடிகளுக்கு நெறிமுறைகளை பின்பற்றி தீர்வு காண முடியாதென தெரிவித்த அவர், அதற்கான அடுத்தகட்ட காய் நகர்த்தல் ஒன்றை மேற்கொள்ள வேண்டியது அவசியமெனவும், அதற்கான அழுத்தங்கள் தற்போது உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
8 minute ago
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
27 minute ago
36 minute ago