2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

தெதுரு ஓயாவில் காணாமல் போன நால்வரும் மரணம்

Freelancer   / 2025 நவம்பர் 05 , பி.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் - தெதுறு ஓயாவில் இன்று நீராடச் சென்று காணாமல் போன நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. 

கிரிபத்கொடையில் இருந்து 10 பேர் கொண்ட குழு சிலாபத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். 

அவர்கள் சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில், 5 பேர் காணாமல் போயிருந்தனர். 

காணாமல் போனவர்களில் ஒருவர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் அவர் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனை அடுத்து காணாமல் போன ஏனையவர்களை தேடும் நடவடிகையில் பொலிஸார், பொலிஸ் உயிர் காப்பு பிரிவினர், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்களும் இணைந்து முன்னெடுத்திருந்தனர். 

இந்நிலையில் காணாமல் போன நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X