Editorial / 2021 மார்ச் 31 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
கத்தோலிக்க தோவாலயங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக அவதானம் செலுத்தப்படும் என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பு நிலைமை குறித்து பகுப்பாய்வு செய்யுமாறு இராணுவத் தலைமையகம் அந்தப் பகுதிக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், பொலிஸார் மேற்கொள்ளும் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு அந்தப் பகுதிக்கு பொறுப்பான இராணு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அடையாளம் காணப்பட்ட சிறப்புப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கவும் இராணுவத் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன கூறியுள்ளார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago