Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 30 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், மு.இராமச்சந்திரன், எஸ்.சதீஸ் குமார்
“பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இறைமை ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து, முன்னோக்கிப் பயணிப்பதற்கும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், கைகோர்த்துப் பயணிப்போம்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட சமுதாயத்துக்கு, காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டமாக, 2,864 பேருக்கு காணியுறுதிப்பத்திரங்கள், நேற்று (29) வழங்கப்பட்டன.
ஹட்டன், டன்பார் விளையாட்டு மைதானத்தில் “எங்கள் நிலத்தில் - எங்கள் வீடு” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு, காணியுறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இந்த நாட்டு மக்களின் ஆணைக்கு அமைவாகவே, புதிய அரசமைப்பு உருவாக்கப்படும். அரசியல் கட்சிகள், நாடாளுமன்றம், சிவில் அமைப்புகள் ஆகியனவற்றின் ஆலோசனைகள் பெறப்படும். அதன் பின்னர் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டே, இறுதித் தீர்மானம் எட்டப்படும்.
“நல்லாட்சியைக் கொண்டு செல்வதற்காக, 2015ஆம் ஆண்டு, இரண்டு பிரதான கட்சிகள், ஒன்றிணைந்தன. அந்த நல்லாட்சியைக் கொண்டு செல்வதற்கு, தகுந்த ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கு, மக்களின் வரம் கிடைத்தது. அந்த மக்களின் ஆணையின் அடிப்படையில், மக்களுக்குத் தேவையானவற்றை செய்து வருகின்றோம்.
“நாட்டைப் பிரிக்கும் திட்டமோ அல்லது மக்களின் மொழி உரிமை, மத உரிமை உள்ளிட்ட ஏனையனவைப் பாதிக்கும் அளவில் அரசமைப்பு உருவாகிவிடக் கூடாது என்பதில் கவனத்துடன் செயற்பட்டு, மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவாக அரசமைப்ைப உருவாக்க, நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
“பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, முன்னாள் அமைச்சர்களான ஜீ.எல் பீரிஸ், திஸ்ஸ வித்தாரண போன்றோர், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா மற்றும் மஹிந்தவின் ஆட்சிக் காலங்களில், 13ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்று, அரசமைப்பைத் திருத்துவதற்கு முயற்சி செய்தனர். ஆனால், அவை முடியவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு, பொதுமக்கள் வழங்கிய வரத்தைக் கொண்டு, அம்மக்களின் உரிமைகளுக்குப் பாதகம் விளைவிக்காத நிலையில், புதிய அரசமைப்பைக் கொண்டு வருவது அவசியமான தேவையாகவும், நல்ல சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது” என்றார். “அன்று, மொழிப் பிரச்சினை இருந்ததால், தனிநாடுப் பிரச்சினை உருவாகியது. இதனால், 30 வருடகால யுத்தத்துக்கு, நாம் முகங்கொடுத்தோம். பல துன்பகரமான நிகழ்வுகளிலிருந்து தற்பொழுது மீண்டுள்ளோம். புதிய அரசமைப்பு ஊடாக, இந்த நாட்டில் ஒருமித்த மக்களாக, மட்டுமன்றி உரிமை பெற்ற மக்களாக, அனைவரையும் வழிநடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்த நாட்டிலுள்ள, இரண்டு பிரதான கட்சிகள் முதல் முதலாக ஒன்றிணைந்து அரசமைப்ைப உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருக்கும் இவ்வேளையில் வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவிக்கின்றன. அந்த சந்தர்ப்பத்தைக் கைநழுவவிடக்கூடாது.
“இந்த உயர்வான நிலையை, நாம் வரவேற்கின்றோம். கிடைத்திருக்கும் மக்களின் ஆணைக்கேற்ப புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
“வெளிநாடுகள் பல, தமது நாடுகளைப் பிரித்தும் விலகியும் செல்ல முற்படுகின்றன. ஆனால், இலங்கையில் உள்ள சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பேகர் போன்றோர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, 2015ஆம் ஆண்டு வாக்களித்து, அவரை ஜனாதிபதியாக்கி, நாட்டை ஒற்றிணைப்பதற்கான வரத்தை வழங்கியுள்ளனர். அந்த வரத்தைப் பயன்படுத்தி, பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும்.
“அடி மட்டத்திலிருந்து ஆராய்ந்து, ஒருமித்த கட்டமைப்பை உருவாக்கி, மக்களின் சமாதான வாழ்க்கைக்கு வித்திடுவதை இலக்காகக் கொண்டு அனைவரையும் ஒன்றிணைத்து செயற்படும் செயலை நாம் முன்னிறுத்தி வருகின்றோம்” என்றும் குறிப்பட்டார்.
“சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம், 1986ஆம் ஆண்டு முதல் மலையக மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது. ஆனால், இவர்களுக்கு இடமோ, வீடோ அப்போது இருக்கவில்லை. ஆனால், இந்த நாட்டின் பிரஜைகளாகிய இவர்கள் இன்று தமக்கென வீடுகளும் காணிகளும் சொந்தமாக்கப்பட்ட நிலையில் வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது.
“ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கும் சகல உரிமைகளும் இவர்களுக்குக் கிடைக்கும் வகையில், இந்த அரசாங்கம் செயற்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago