2025 மே 14, புதன்கிழமை

புதிய ஆளுநர் இருவர் பதவிப்பிரமாணம்

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (04) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

வட மத்திய மாகாண ஆளுநராக திஸ்ஸ விதாரணவும், கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஆறு புதிய ஆளுநர்கள் ஆறு பேர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் கடந்த மாதம் (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருந்தனர்.

ஆளுநர்களின் முழுமையான விவரங்கள் 

திஸ்ஸ விதாரண–   வட மத்திய மாகாண ஆளுநர்

அனுராதா யஹம்பத் –கிழக்கு மாகாணம்

ராஜா கொல்லுரே –  ஊவா மாகாண ஆளுநர்

சீதா அரம்பேபொல – மேல் மாகாண ஆளுநர்

ஏ.ஜே.எம்.முஸம்மில் – வடமேல் மாகாண ஆளுநர்

லலித் யு.கமகே         –  மத்திய மாகாண ஆளுநர்

வில்லி கமகே         –   தென் மாகாண ஆளுநர்

டிகிரி கொப்பேகடுவ – சபரகமுவ மாகாண ஆளுநர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .