Editorial / 2026 மார்ச் 09 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்த நான்கு இலங்கையர்களும் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பிரதி அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"காயமடைந்த நான்கு இலங்கையர்களில் மூவருடன் நான் தொலைபேசி வாயிலாக உரையாடினேன். அவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்; அத்தோடு அவர்கள் சிகிச்சைகளின் பின்னர் நலமடைந்து வருகின்றனர்."
நான்காவது நபரைத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொள்ள முடியாத போதிலும், அவரும் பாதுகாப்பாக வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக ஹேமச்சந்திரா வலியுறுத்தியுள்ளார். அந்தந்தப் பிராந்தியங்களில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் ஊடாக நிலைமைகள் மிக நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago