2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

மஹிந்தவின் கூட்டத்தில் சலசலப்பு: அமைச்சர்கள் மூவர் வெளிநடப்பு

Editorial   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பொன்று நடைபெற்றுகொண்டிருக்கின்றது.

இந்த சந்திப்பின் போது, கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அந்த கூட்டத்திலிருந்து அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரும் வெளிநடப்பு செய்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டத்திலிருந்து வெளியேறிய போதிலும் அம்மூவரும் அலரிமாளிகையில் இருந்து இன்னும் வெளியேறவில்லையென, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X