Editorial / 2020 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாணசபை தேர்தல் நடைபெறும்வரை ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமைத்துவத்தின்கீழ், கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது, கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் பெறுபேறுகளை ஆராய்ந்த பின்னர் உடனடியாக கட்சியை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று (12) மேற்கொண்ட கலந்துரையாடலின்போது, இந்த விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு 03 - 05ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் தொடர்பில் இதன்போது தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை.
நாளை (14) நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது
18 minute ago
26 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
34 minute ago
1 hours ago