Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 10 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சுமார் இரண்டரை மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, இருவருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடு சமாதானமான முறையில் முடிவுக்குக் வந்துள்ளதாக தகவல்கள் வெளிகியுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை (29) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம், பிரதமர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இந்த விடயமானது தேசிய அரசாங்கத்தின் பிரைதான பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் பெரும் அதிருப்பதியை தோற்றுவித்திருந்தது.
இந்த விடயமானது ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான உறவுகளில் மேலும் விரிசலையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்த பிரச்சினைகள் தொடர்பிலும், தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது. மேலும், இதன் போது இருவருக்கும் இடையில் காணப்பட்ட பிரதானமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய அரசாங்கத்தின் எஞ்சிய பதவிக்காலம் தொடர வேண்டுமென வலியுறுத்தும், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, மஹிந்த அமரவீர, துமிந்த திசநாயக்க ஆகிய நால்வரும் இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
குறித்த நால்வரும் ஐ.தே.கவின் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசிம் ஆகியோரைச் சந்தித்துப் பேசியதை அடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது, அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக முன்னெடுப்பது குறித்தும், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற இரு தேர்தல்களின்போதும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும், மேலும் ஊழல் மோசடி வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துதல், ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் கடத்தல் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago