J.A. George / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் 06 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய நிலையில் அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த 05ஆம் திகதி முன்னிலையாகினார்.
அன்றைய தினம் வாக்குமூலமளிக்க வருமாறு அவருக்கு கடந்த மாதம் 22ஆம் திகதி ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவரிடம் 7 மணித்தியாலம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன்று (12) மீண்டும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய அவர் அங்கு முன்னிலையாகினார்.
இதேவேளை, குறித்த ஆணைக்குழுவில் கடந்த 06ஆம் திகதி ஆஜரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒன்றரை மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கினார்..
இதனையடுத்து, நாளை (13) ஆணைக்குழுவில் மீண்டும்ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
18 minute ago
26 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
34 minute ago
1 hours ago