Editorial / 2026 மார்ச் 06 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையிலிருந்து பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்குப் பயணித்த பக்தர்களின் படகு வெள்ளிக்கிழமை (06) விபத்துக்குள்ளானது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா தற்போது இடம்பெற்று வருகின்றது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கடல் வழியாகப் பயணிப்பது வழக்கம்.
வெள்ளிக்கிழமை (06) அன்று, பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியது. இவ்விபத்தில் யாத்திரிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.படகில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலர் பயணித்துள்ளனர்.இதுவரை மூன்று பேர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஏனைய பக்தர்களைத் தேடும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமானது. இன்று (06) நற்கருணை பெருவிழா இடம்பெறுகின்றது. நாளை (07) சனிக்கிழமை தேர்த் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago