Editorial / 2026 மார்ச் 27 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT), மஹரகம உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய வகை நிதி மோசடி குறித்துப் பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரபல மொபைல் தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகள் போலத் தோற்றமளிக்கும் ஒரு குழுவினர், நிறுவன முத்திரையிடப்பட்ட ரீ-சேர்ட்டுகளை (T-shirts) அணிந்து வீதிகளில் செல்லும் மக்களை அணுகுகின்றனர். அவர்களிடம் தற்போது பயன்படுத்தும் தொலைபேசிச் சேவை, மாதந்தரக் கட்டணம் மற்றும் பயன்பாட்டு முறைகள் குறித்துக் கேட்டறிகின்றனர்.
பின்னர், "மாதம் 2,000 அல்லது 3,000 ரூபாய் நிலையான கட்டணத்தில் அளவற்ற (Unlimited) அழைப்புகளைப் பேசலாம்" என்ற கவர்ச்சிகரமான புதிய பொதி ஒன்றை அறிமுகப்படுத்துகின்றனர். இதனைச் செயல்படுத்த ஒருமுறை மட்டும் 5,000 ரூபாவை 'பதிவுக் கட்டணமாக' செலுத்துமாறு கோருகின்றனர்.
பணத்தைச் செலுத்தியவுடன், பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசிக்கு ஒரு உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி (Confirmation SMS) அனுப்பப்படுகிறது. இதனால் இது உண்மையான சேவை என்று மக்கள் நம்புகின்றனர். இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு தொலைபேசிப் பில்களில் தேவையற்ற மேலதிகக் கட்டணங்கள் வரும்போதோ அல்லது மேலதிகப் பணம் செலுத்தாமல் சேவை துண்டிக்கப்படும்போதோதான் தாம் ஏமாற்றப்பட்டதை மக்கள் உணர்கின்றனர்.
தனிநபர் இழப்பு 5,000 ரூபாய் என்ற அளவில் சிறியதாகத் தோன்றினாலும், அதிகளவிலான மக்கள் இந்த மோசடியில் சிக்கி வருவதாக SLCERT தெரிவித்துள்ளது.
வீதிகளில் மொபைல் பொதிகள் அல்லது சிம் கார்டுகளை வழங்கும் நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறும், அவர்கள் அந்தந்த நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளா என்பதைச் சரிபார்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் இவ்வாறான மோசடிகள் கொழும்புக்கு வெளியேயுள்ள ஏனைய பகுதிகளுக்கும் விரிவடையக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
6 minute ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
4 hours ago
4 hours ago
4 hours ago