Editorial / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு-2 நவலோக்க வைத்தியசாலையில் திடீரென விஜயமொன்றை மேற்கொண்டார்.
அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இருவரும் தனியாக சுமார் ஒரு மணிநேரத்தை கழித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான உரை தொடர்பில் வாக்கமூலம் அளிப்பதற்காக வருகைதருமாறு ஹரின் பெர்ணான்டோவுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
எனினும், திடீரென சுகயீனமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், தன்னை கைதுசெய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து, தன்னை கைது செய்யாமல் இருப்பதற்கான இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை, அவரது சட்டத்தரணியின் ஊடாக தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விருவரின் சந்திப்பும் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago