Editorial / 2020 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 107ஆவது ஜனன தினத்தையொட்டி, அவரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (30) நடைபெற்றது.
இந்நிகழ்வில், இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டு, மலர் மாலை அணிவித்தார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து, இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனில், அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இ.தொ.காவின் ஆவணங்களடங்கிய கண்காட்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில், இ.தொ.காவின் நிதிக் காரியதரசியும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஸ்வரன், உபதலைவர்களான செந்தில் தொண்டமான், பி.சக்திவேல், கணபதி கனகராஜ் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.





36 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
2 hours ago