Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 10 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பரங்கிகமம் பகுதியில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் உணவுப் பண்பாட்டியல் தொடக்க விழா வான அறுவடை விழா வியாழக்கிழமை (9) காலை 11:30 மணியளவில் நடைபெற்றது.
இலுப்பை கடவை கமக்கார அமைப்பின் தலைவர் வி. எஸ். சிவகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர். க. கனகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழர் பாரம்பரிய பண்பாட்டு முறைப்படி முதல் அறுவடையை தொடங்கி வைத்தார்.
இதன் போது அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் மாவட்ட விவசாயத் திணைக்கள உதவி ஆணையாளர் அன்ரனி மரின் குமார்,மாவட்ட விவசாய பணிப்பாளர் அ.சகிலா பானு மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள் ,விவசாய அமைப்பின் உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கமக்கார அமைப்பின் உறுப்பினர்கள் பொங்கல் வைத்து மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கடந்த காலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் நிமித்தம் விவசாயிகள் முற்றாக பாதிக்கப்பட்ட போதிலும் இப்பகுதியில் நெல் விளைச்சல் வெற்றியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஆர்.லெம்பேட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
03 Jul 2025