2022 ஜூலை 04, திங்கட்கிழமை

அறுவடை...

Freelancer   / 2022 ஜூன் 22 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

விவசாய அமைச்சின் கீழ் கண்காணிக்கப்படும் விவசாய நல புத்தாக்க திட்டத்தின் மூலம் வாகரையில் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை பார்வையிடும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட பச்சை வெள்ளரி அறுவடை நிகழ்விலும் ஆளுநர் கலந்து கொண்டதுடன், இவ் விவசாய நிலங்களில் உப விளைபொருளாக உயர்தர மானிக்காய் ரகங்கள் பயிரிடப்பட்டதுடன், அறுவடையின் தரத்தையும் கிழக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார்.

மேலும் இவ்வாறு தோட்டங்களை பார்வையிட்ட ஆளுநர், மாங்கேணி பிரதேசத்தில் ஹேலிஸ் நிறுவனத்தினால் நிறுவப்பட்டுள்ள பச்சை வெள்ளரி ஏற்றுமதி பதப்படுத்தும் தொழிற்சாலையையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.ஜி.கே.முத்துபண்டா, மாகாண விவசாயப் பணிப்பாளர் கலாநிதி எம்.ஹுசைன் ஆகியோரும் கலந்து கொண்டனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .