Editorial / 2024 மே 02 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம். எஸ். எம். நூர்தீன்
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, காத்தான்குடி-5 பத்ரிய்யா ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு வியாழக்கிழமை (02) விஜயம் செய்து நூறு குடும்பங்களுக்கு உலருணவு பொருட்களை வழங்கி வைத்தார்
இந்திய உயர்ஸ்தானிகரை, அப்துல் ஜவாத் ஆலிம் நம்பிக்கை வலியுல்லாஹ் பொறுப்பு நிதியத்தின் ஸ்தாபகத் தலைவர் மௌலவி ஏ.ஜே .அப்துர் ரஊப் மிஸ்பாஹி வரவேற்றார்
இதன் போது காத்தான்குடி பத்ரிய்யா ஜூம்ஆப் பள்ளிவாயலிலுள்ள அப்துல் ஜவாத் ஆலிம் அவர்களின் சியாரத்துக்கு போர்வை விரிக்கப்பட்டு அங்கு பிராத்தனை நிகழ்வும் இடம் பெற்றது
இதையடுத்து பத்ரிய்யா ஜூம்ஆப் பள்ளிவாயல் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது இந்திய உயர்ஸ்தானிகருக்கு அப்துல் ஜவாத் ஆலிம் நம்பிக்கை வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா மற்றும் காத்தான்குடி நகர சபை முன்னாள் பிரதி தவிசாளர் எம் .ஐ. எம் ஜெசீம் உட்பட தூதரக அதிகாரிகள் அப்துல் ஜவாத் ஆலிம் நம்பிக்கை வலியுல்லாஹ் பொறுப்பு நிதியத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







31 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
5 hours ago