Janu / 2026 பெப்ரவரி 10 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘சாத்’ (SADH), விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக செவ்வாய்க்கிழமை (10) அன்று இலங்கையை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் மரபுகளுக்கு ஏற்ப கப்பலை வரவேற்றது.
அதன்படி, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 75 மீட்டர் நீளமுள்ள 'RNOV SADH' என்ற போர்க்கப்பலுக்கு, லெப்டினன்ட் கமாண்டர் ஷாஹீம் சௌட் அப்துல் ரஹ்மான் அல் பலுஷி (Shaheen Saud Abdul Rahman AI Balushi) தலைமை தாங்குகிறார்.
மேலும், போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் அங்கத்துவ குழுவினர்கள் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.
எம்.யூ.எம்.சனூன்






2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026