Editorial / 2026 ஏப்ரல் 21 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
உயிர்த்த ஞாயிறு கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்று செவ்வாய்க்கிழமை (21) மட்டக்களப்பு நகரின் பல்வேறு இடங்களில் உணர்வுப்பூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில், காந்தி பூங்கா முன்றலில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் (ESDF) ஏற்பாட்டில், மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் மற்றுமொரு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்:
இந்தத் தாக்குதலின் வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில், மட்டக்களப்பு மக்கள் மிகுந்த சோகத்துடன் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.










வாலகிருஸ்ணா











19 minute ago
30 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
36 minute ago
51 minute ago