2025 ஜூலை 23, புதன்கிழமை

கருவாட்டுக்குப் படையெடுப்பு...

Editorial   / 2017 நவம்பர் 06 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கிண்ணியாவில் கருவாடு பதனிடும் தொழிற்றுறையில், அநேகமான மீனவர்கள், அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

கிண்ணியா கடற்பரப்பில் பிடிக்கப்படும் மீன், இறால் ஆகியவற்றை இங்குள்ள மீனவர்கள், உடன் தூய முறையில் கருவாடுகளாகப் பதனிட்டு, விற்பனை செய்துவருகின்றனர்.

இதனால், நாட்டின் தென்பகுதியிலும் ஏனைய இடங்களிலிருந்தும் வாகனங்களில் தினமும் படையெடுக்கும் மக்களும் வியாபாரிகளும், சாரை சாரையாக இங்கிருந்து கருவாடுகளை வாங்கிக்கொண்டு செல்கின்றனர்.

கருவாடு பதனிடும் தொழில் முலம், அநேகமானோருக்கு இங்கு தொழில்வாய்ப்புகளும் வருமானமும் கிடைக்கப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு: எஸ்.எல்.நௌபர்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .