2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கருப்புக்கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

1000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி, மலையகத்தின் பல பகுதிகளில் 8ஆவது நாளாகவும் ,த் திங்கட்கிழமை, ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பதுளை, வட்டவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த  தோட்டத் தொழிலாளர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிஒயா, டெம்பஸ்டோ, லொனக்க, மீனாட்சி தோட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே கருப்புக்கொடிகளை கட்டியாவறு, வட்டவளை பிரதான வீதியில் நேற்றுத் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு -ஹட்டன், கண்டி பகுதிகளிக்கான பிரதான போக்குவரத்தும் பல மணிநேரம் தடைப்பட்டிருந்தது. வட்டவளையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  வட்டவளை நகர வர்த்தகர்களும் கடைகளை மூடி ஒத்துழைப்பு வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X