Mayu / 2024 ஜூலை 09 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை(7) இரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மன்னார் மடு மாதா சிறிய குருமட உதவி இயக்குனர் அருட்தந்தை ஜொனார்தன் கூஞ்ஞவின் பூதவுடன் மக்களின் அஞ்சலிக்காக செவ்வாய்க்கிழமை(9) காலை 8.30 மணி முதல் மன்னார் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் பூதவுடல் திங்கட்கிழமை (08) பிற்பகல் மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இரவு 7 மணியளவில் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அதற்கமைய, செவ்வாய்க்கிழமை (09) ஆயர் இல்ல சிற்றாலயத்தில் காலை 7 மணியளவில் இரங்கல் திருப்பலியும் தொடர்ந்து காலை 8.15 மணிக்கு அவரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்துக்கு எடுத்து வரப்பட்டது.

காலை 8.15 மணியிலிருந்து பிற்பகல் 2.45 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக அருட்பணியாளரின் பூதவுடல் வைக்கப்படும்.
இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் கூட்டு இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (9) மாலை 5 மணிக்கு பேராலயத்திலிருந்து மன்னார் சேமக்காலை க்கு அன்னாரின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு 5.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஆர்.லெம்பேட்

56 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
3 hours ago